கொழும்பு - பொரளை பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நடத்திய விசேட கூட்டுச் சோதனை நடவடிக்கையில் குறைந்தது 35 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹெரோயின் வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்களும், ஐஸ் போதைப் பொருளுடன் நான்கு பேரும், கஞ்சாவுடன் ஆறு சந்தேக நபர்களும் இந்த நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், 2 வாள்களை வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்களும், பிடியாணை நிலுவையில் உள்ள இரண்டு சந்தேக நபர்களும், மேலும் 19 சந்தேக நபர்களும் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரிடமிருந்து ஹெரோயின் கடத்தல் மூலம் சம்பாதித்ததாக கருதப்படும் 26 இலட்சம் ரூபா பணமும் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட ஒருவரிடமிருந்து ஐஸ் போதைப் பொருள் கடத்தல் மூலம் ஈட்டியதாக கருதப்படும் 215,000 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் நேற்று (12) புதுக்கடை மற்றும் மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவிருந்தனர்.
No comments:
Post a Comment