லாப் Gas விலைகளும் இன்று முதல் குறையும் - News View

About Us

About Us

Breaking

Sunday, June 4, 2023

லாப் Gas விலைகளும் இன்று முதல் குறையும்

லிற்றோ கேஸ் நிறுவனம் சமையல் எரிவாயுவின் விலைகளை குறைத்துள்ள நிலையில் லாப் கேஸ் நிறுவனமும் இன்று முதல் சமையல் எரிவாயுவின் விலைகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் என அந்த நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

எந்தளவு விலைக் குறைப்பு மேற்கொள்ளப்படும் என்பது தொடர்பில் இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் எல்.பி. கேஸ் விலை அதிகரித்திருந்ததால் உற்பத்தி மற்றும் விநியோக செலவுகள் அதிகரித்துள்ள நிலையில் சமையல் எரிவாயுவின் விலைகளை குறைக்க முடியாது என அந்த நிறுவனம் கடந்த மாத முதல் வாரத்தில் அறிவித்திருந்தது. 

அந்த வகையில் சந்தையில் 12. 5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 3990 ரூபாவாகவும், 5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1596 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

இத்தகைய நிலையிலேயே இன்று முதல் மேலும் விலைக் குறைப்பை மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment