நாட்டில் தற்போது நிலவும் அதிக உஷ்ணமான காலநிலை காரணமாக சிறுவர்கள் மத்தியில் தோல் சம்பந்தமான நோய்கள் அதிகரித்து வருவதாக சிறுவர் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.
அது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா, சிறுவர்கள் மத்தியில் காணப்படும் இத்தகைய தோல் சம்பந்தமான நோய்கள் தொடர்பில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதிக உஷ்ணம் காரணமாக இத்தகைய நோய்கள் ஏற்படுவதாக குறிப்பிட்டுள்ள அவர், சிறுவர்களை அதிக வெயிலில் விடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் முடிந்தளவு நீரை.பருகச் செய்யுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இத்தகைய தோல் சம்பந்தமான நோய்களிலிருந்து சிறுவர்களை பாதுகாப்பதில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment