அதிபர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் மேற்படி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழுவுக்கு கல்வியமைச்சர் யோசனைகள் சிலவற்றையும் முன்வைத்துள்ளார்.
அதிபர்கள் சேவை அதிகாரிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் கல்வியமைச்சின் செயலாளரினால் நியமிக்கப்பட்டுள்ள விசேட நிபுணர்கள் குழுவூடனான பேச்சுவார்த்தையொன்று கல்வியமைச்சில் இடம்பெற்றுள்ளது.
அதன்போது அதிபர்கள் சேவையில் நீண்ட காலமாக நிலவும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
அந்த வகையில் சம்பள முரண்பாடு, ஆட்சேர்ப்பு முறைகளில் காணப்படும் குறைபாடுகள், பதவியுயர்வு மற்றும் இடமாற்றங்கள் தொடர்பில் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment