இலங்கையில் குரங்கம்மை தொற்று நோய் குறித்து சமூகத்தில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தக் கூடாதென, குரங்கம்மை நோய் தொடர்பில் பதில் பிரதான தொற்றுநோய் வைத்திய நிபுணர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்.
அண்மையில் மேலும் இருவருக்கு குரங்கம்மை தொற்று ஏற்பட்டிருந்தது. இதையடுத்து நாட்டினுள் கண்டறியப்பட்ட குரங்கம்மை நோயாளர் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.
குரங்கம்மை தொற்று ஒருவரிடமிருந்து பிறிதொருவருக்கு பரவுவது மிகவும் அரிதாகவே காணப்படுகிறது. எனவே, இது தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லையென சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment