இலக்கிய ஆளுமை கலைவாதி கலீல் காலமானார் - News View

About Us

About Us

Breaking

Thursday, June 8, 2023

இலக்கிய ஆளுமை கலைவாதி கலீல் காலமானார்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

ஈழத்தின் தலை சிறந்த இலக்கியவாதியும் பன்முக ஆளுமை கொண்ட பல்துறைக் கலைஞருமான தாஜுல் உலூம் கலைவாதி கலீல் இன்று (09) வெள்ளிக்கிழமை காலை காலமானார்.

ஆசிரியராக, அதிபராக, விரிவுரையாளராக, உபபீடாதிபதியாக, கலைஞனாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் துணைத் தலைவராகவும் இருந்து சமூகத்திற்கும் கலைக்கும் பெருந் தொண்டாற்றி வந்த அன்னாரது இழப்பு இலக்கியத்திற்கு மட்டுமல்ல, கல்விச் சமூகத்திற்கும் பேரிழப்பு.

மர்ஹூம் கலைவாதி கலீல் அவர்களின் ஜனாஸா இலக்கம் 148, பொல்கொடுவ வீதி, பின்வல என்ற பாணந்துறையிலுள்ள அன்னாரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது, 

இன்று இஷாத் தொழுகையைத் தொடர்ந்து எழுவில, ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

கலைஞர்கள், அரசியல்வாதிகள், இலக்கியவாதிகள், கல்விமான்கள் என பலதரப்பட்டோரும் அவரது ஜனாஸாவை பார்வையிட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment