சந்தேகத்திற்கிடமான முறையில் 5 வயது குழந்தை மரணம் : கண்ணாடித் துண்டுகளால் குத்தப்பட்ட காயங்களுடன் மீட்பு - News View

About Us

About Us

Breaking

Friday, June 9, 2023

சந்தேகத்திற்கிடமான முறையில் 5 வயது குழந்தை மரணம் : கண்ணாடித் துண்டுகளால் குத்தப்பட்ட காயங்களுடன் மீட்பு

கண்ணாடித் துண்டுகளால் குத்தப்பட்ட காயங்களுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் மரணித்த குழந்தையொன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

முல்லேரியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, ஹல்பராவ பிரதேசத்தில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக 119 பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த செய்தியின் அடிப்படையில் முல்லேரிய பொலிஸ் நிலையம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

மாலம்பே, ஹல்பராவவை வசிப்பிடமாகக் கொண்ட 5 வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

உயிரிழந்த குழந்தையின் தந்தை தனியாக வசிப்பதாலும், தாய் வேலைக்குச் செல்வதாலும், குழந்தை தனது பாட்டியின் பராமரிப்பில் இருந்த நிலையில், ஹல்பராவ பகுதியில் உள்ள வேலைத்தளம் ஒன்றின் முன்பாக உடைந்த கண்ணாடிப் போத்தலின் துண்டுகளால் ஏற்பட்ட காயங்களுடன் குத்திக் கொலை செய்யப்பட்டமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

சட்ட வைத்திய அதிகாரியினால் மரண விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சடலம் பிரேத பரிசோதனைக்காக முல்லேரியா தொற்று நோய் வைத்திய அதிகாரியின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இது கொலையா என்பது தொடர்பில் முல்லேரியா பொலிஸ் நிலைய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment