இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யும் உத்தரவு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 25ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கின் தீர்ப்பு இன்றையதினம் (06) மேன்முறையீட்டு நீதிமன்றில் அறிவிக்கப்படவிருந்த நிலையில், மேன் முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன, ஏ. மரிக்கார் ஆகிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது நீதிமன்றம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது.
டயானா கமகே பிரித்தானிய குடியுரிமையுடனான இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர் எனவும், தற்போதைய அரசியலமைப்பின் பிரகாரம் அவருக்கு எம்.பி. பதவியை வகிக்க முடியாது எனவும் தெரிவித்து, குறித்த மனுவை சமூக செயற்பாட்டாளரான ஓஷல ஹேரத் தாக்கல் செய்திருந்தார்.
No comments:
Post a Comment