தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரி ஐக்கிய இளைஞர் சட்டத்தரணிகள் சங்கத்தினர் இலஞ்சம் மற்றும் ஊழல் எதிர்ப்பு பிரிவில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதன்போது ஐக்கிய இளைஞர் சட்டத்தரணிகள் சங்கத்தினர் கருத்து தெரிவிக்கையில், அலி சப்ரி ரஹீமுக்கு 75 இலட்சம் ரூபா தண்டப்பணம் மாத்திரமே அறவிடப்பட்டுள்ளது. எனினும் சாதாரண பிரஜை ஒருவருக்கு எவ்வாறு 75 இலட்சம் ரூபாவை செலுத்த முடியும்? அதற்கான இயலுமை இல்லை.
அவர் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று தடவைகள் துபாய்க்கு சென்றுள்ளார். சாதாரணமாக பாராளுமன்ற உறுப்பினர்கள் விசேட விருந்தினர் பகுதியினூடாகவே வெளிநாடுகளுக்கு செல்வார்கள்.
விமானச்சீட்டுக்கு 3 இலட்சம் ரூபா தேவைப்படும். அவ்வாறாயின் எவ்வளவு நாட்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார் என்பதை தேட வேண்டும். அதற்கான நிதி எங்கிருந்து கிடைத்தது? என்பதில் எமக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் தேடியறியும் பட்சத்தில் பாராளுமன்றத்திலுள்ள இதுபோன்றுள்ள உறுப்பினர்கள் ஊழல் மோசடிகளை கண்டறிய முடியும் என்றனர்.
Vidivelli
No comments:
Post a Comment