(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)
விவாகரத்து சட்டத்தில் ஓரினச் சேர்க்கை ஒரு குற்றமாக உள்ளடக்கப்படவில்லை. ஆகவே நடைமுறைக்கு பொருத்தமான வகையில் விவாகரத்து சட்டத்தை திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (21) இடம்பெற்ற ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தில் பாலியல் இலஞ்சம் ஒரு ஊழல் குற்றமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
பெண்களுக்கு பெண்களால் இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தல்கள், ஆண்களுக்கு ஆண்களால் இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தல்கள் இந்த சட்டமூலத்தில் ஊழல் குற்றமாக கருதப்படுகிறது.
உயர் கல்வி துறையில் உள்ள பெண் அதிகாரி ஒருவர் சக பெண்ணுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி அவரது கணவர் நீதிமன்றத்தை நாடி விவாகரத்து கோரியுள்ளார்.
நடைமுறையில் உள்ள விவாகரத்து சட்டத்தில் ஓரினச் சேர்க்கை ஒரு குற்றமாக உள்ளடக்கப்படவில்லை. ஆகவே நடைமுறைக்கு சாத்தியமான வகையில் விவாகரத்து சட்டத்தை திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment