சோழர் காலத்து தீர்த்தக் கிணற்றிலிருந்து சாவகச்சேரி மக்களுக்கு குடி தண்ணீர் - அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 21, 2023

சோழர் காலத்து தீர்த்தக் கிணற்றிலிருந்து சாவகச்சேரி மக்களுக்கு குடி தண்ணீர் - அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை

சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள நல்ல தண்ணீர் கிணற்றை சுத்திகரித்து பிரதேச மக்களுக்கும் பயணிகளுக்கும் குடிநீர் வழங்குவது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடினார்.

குறித்த விடயம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில், நேற்று குறித்த பகுதிக்கு சென்று நிலமைகளை நேரடியாக அமைச்சர், செவ்வாய்க்கிழமை (20) சம்பந்தப்பட் தொல்லியல் திணைக்கள அதிகாரிகளை வரவழைத்து குறித்த விடயம் தொடர்பாக கலந்துரையாடினார்.

குறித்த கிணறு சோழர்களினால் அமைக்கப்பட்ட சிவன் கோயிலின் மூலஸ்தானத்திற்கான தீர்த்தக் கிணறு என்பது ஆய்வு ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டமையினால் தொல்லியல் திணைக்களத்தினால் பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமைச்சருடனான சந்திப்பின் போது, குறித்த கிணற்றின் கட்டுமானங்களில் பாதிப்பை ஏற்படுத்தாமல் மக்களுக்கான குடிநீரை வழங்குவதற்கு தொல்லியல் திணைக்களத்தினர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

தொல்லியல் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர்(யாழ்ப்பாணம்) திரு. பந்துல ஜீவ, புனர்நிர்மாணப் பொறுப்பதிகாரி திருமதி ராகினி மற்றும் மேலாய்வு உத்தியோகஸ்தர் திரு. தஷிந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment