விளையாட்டு உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புதல் : ஆர்வமுள்ளோர் விண்ணப்பிக்கவும் - News View

About Us

About Us

Breaking

Thursday, June 8, 2023

விளையாட்டு உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புதல் : ஆர்வமுள்ளோர் விண்ணப்பிக்கவும்

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் பின்வரும் வெற்றிடங்களுக்கு பதில் விளையாட்டு உத்தியோகத்தராக கடமையாற்ற ஆர்வம் உள்ள கிழக்கு மாகாண அபிவிருத்தி உதியோகத்தர் சேவையைச் சேர்ந்த உத்தியோகத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. (வெற்றிட விபரம் இணைக்கப்பட்டுள்ளது)

எனவே மேற்குறித்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் உங்கள் பின்வரும் தகவல்களை (sports@ep.gov.lk) என்ற மின்னஞ்சல் மூலமாகவோ மூலமாகவோ அல்லது 026-2223922 என்ற தொலைநகல் மூலமாகவோ 09/06/2023 அன்று காலை 8 மணிக்கு முன்னதாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

1. பெயர்

2. தே/அ/ அ /இல

3. நிரந்தர முகவரி

4. தற்போது கடமை புரியும் பதவி மற்றும் தரம்

5. தற்போது வேலை செய்யும் நிலையம்

6. கல்வித் தகமை

7. விளையாட்டுத் தகைமை மற்றும் விளையாட்டு சான்றுதள்களின் பிரதி

8. ஏனைய தகமைகள்

9. மூன்று விருப்பமான நிலையங்கள்

10. தொலைபேசி இலக்கம்

மாகாண விளையாட்டுப் பணிப்பாளர்
கிழக்கு மாகாணம்.

No comments:

Post a Comment