மலையக காணியுரிமையின் ஆரம்பப்புள்ளி 7 பேர்ச் நிலம் - ஹட்டனில் மனோ கணேசன் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 21, 2023

மலையக காணியுரிமையின் ஆரம்பப்புள்ளி 7 பேர்ச் நிலம் - ஹட்டனில் மனோ கணேசன்

மலையக தமிழர்களின் காணி உரிமை போராட்டத்தின் ஆரம்பப்புள்ளி ஏழு பேர்ச் நிலம் ஆகும். அன்றைய மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சர் திகாம்பரத்தால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரமே இது தொடர்பான முதலாவது அரசாங்க ஆவணமாகும். இது தமிழ் முற்போக்கு கூட்டணியின் வெற்றியாகும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஹட்டன் கிருஷ்ணபவான் மண்டபத்தில் நடைபெற்ற மலையக காணியுரிமை மாநாட்டில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது, உலகில் நடைபெறும் போராட்டங்களில் பெரும்பாலானவை காணி உரிமை கோரியே நடைபெறுகின்றன.

காணி உரிமையே சமூகத்துக்கு தேசிய இன அந்தஸ்த்தை வழங்குகிறது.

வடக்கு கிழக்கில் தேசிய விடுதலைப் போராட்டம் நிகழ்கிறது. அங்கே போர் ஓய்ந்தாலும், இராணுவ பிரசன்னம் ஓயவில்லை. அதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

ஆகவே மலையகத்தில் கவனமாக கோரி பெற வேண்டும். அது தெரிவில் கோஷம் எழுப்புவது போல், சமூக ஊடகங்களில் எழுதுவது போல் சுலபமான காரியம் அல்ல.

இங்கே வாழ, பயிர் செய்ய நிலம் வேண்டும். ஐந்து பேர்ச் என்பதிலிருந்து ஏழு பேர்ச் என்று உயர்த்த பெரும் பாடுபட வேண்டிய இருந்தது.

இந்த பின்னணியில், மலையக தமிழர்களின் காணி உரிமை போராட்டத்தின் ஆரம்பப்புள்ளி ஏழு பேர்ச் நிலம் ஆகும்.

மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சர் திகாம்பரத்தால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரமே இது தொடர்பான முதலாவது அரசாங்க ஆவணமாகும். இது தமிழ் முற்போக்கு கூட்டணியின் வெற்றியாகும் என்றார்.

No comments:

Post a Comment