இன்று (21) காலை கொட்டாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் கொட்டாவ நகருக்கு அருகில் உள்ள மருத்துவ ஆய்வு கூடத்தில் இருந்த குறித்த நபர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காயமடைந்த நபர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் குறித்த மருத்துவ ஆய்வு கூடத்தில் பணியாற்றிய 30 வயதுடையவர் ஆவார்.
இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு கைத்துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொட்டாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment