வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடுகள் இரட்டிப்பாக அதிகரிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, May 28, 2023

வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடுகள் இரட்டிப்பாக அதிகரிப்பு

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு (31) முதல் அமுலுக்கு வரும் வகையில் வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்படும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது ட்விட்டர் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தேசிய எரிபொருள் அட்டை (National Fuel Pass) பதிவின் மூலமான QR வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு எதிர்வரும் புதன்கிழமை (31) முதல் அதிகரிக்கப்படவுள்ளன.

வாராந்த எரிபொருள் ஒதுக்கீடுகள் செவ்வாய்க்கிழமை முதல் புதுப்பிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கடந்த வாரம் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜூன் மாத எரிபொருள் விலைத் திருத்தத்துடன் எரிபொருள் ஒதுக்கீடுகளை அதிகரிக்கவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பதிவு செய்யப்பட்ட வாடகை முச்சக்கர வண்டி
15 இலிருந்து 22 லீற்றர்

ஏனைய முச்சக்கர வண்டி
8 இலிருந்து 14 லீற்றர்

மோட்டார் சைக்கிள்
 7 இலிருந்து 14 லீற்றர்

கார், வேன்
 30 இலிருந்து 40 லீற்றர்

பஸ், லொறி
 75 இலிருந்து 125 லீற்றர்

வேன்
 30 இலிருந்து 40 லீற்றர்

அதன்படி வாரந்த எரிபொருள் ஒதுக்கீடு வருமாறு

No comments:

Post a Comment