விவசாயிகளுக்கு துப்பாக்கிகள் வழங்க அரசாங்கம் தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Thursday, May 18, 2023

விவசாயிகளுக்கு துப்பாக்கிகள் வழங்க அரசாங்கம் தீர்மானம்

விலங்குகளிடமிருந்து பயிர்ச் செய்கைகளை பாதுகாப்பதற்கு விவசாயிகளுக்கு துப்பாக்கிகள் வழங்கப்படவுள்ளன. இதற்கான அனுமதிப்பத்திரங்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார். 

அது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், பயிர்ச் செய்கைகளைப் பாதுகாப்பதற்காக விவசாயிகளுக்கு துப்பாக்கிகளை வழங்கும் சட்டத்தை திருத்தம் செய்து, மீண்டும் துப்பாக்கிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படு மென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐந்து ஏக்கர் பயிர்ச் செய்கைக் காணியுள்ளவர்களுக்கு துப்பாக்கிகளை வழங்கும் வகையிலே, சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது. 

ஒரு வருட காலத்தில் பல்வேறு விலங்குகளினால் நாடு முழுவதும் பயிர்ச் செய்கைகள் பாரியளவில் அழிவுற்றுள்ளதைக் கவனத்திற் கொண்டு, காலத்திற்குத் தேவையான வகையில் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, நாட்டில் விவசாயத்துறையை முன்னேற்றுவதற்கும் விவசாயப் பொருளாதாரத்தை வளப்படுத்தி, உணவுப் பாதுகாப்பை முன்னெடுப்பதற்கும் முறையான வேலைத் திட்டங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதனொரு அம்சமாகவே விவசாயிகளுக்கு துப்பாக்கிகள் வழங்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை, மாவட்ட செயலகங்கள் மூலம் விவசாயிகள் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment