தென்பகுதி கடற்பரப்பில் 121 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் ஹசீஷ் போதைப் பொருளுடன் ஆறு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக கடற்படையின் ஊடகப் பணிப்பாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்தார்.
கடற்படையினரும் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றி வளைப்பு நடவடிக்கைகளிலே, இந்த பாரியளவு போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.
இதன்போது, 111.606 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் 10.254 கிலோ கிராம் ஹசீஷ் போதைப் பொருட்கள் (பொதியுடன் நிறை) மீட்கப்பட்டுள்ளன.
இதனை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்ட இழுவை படகொன்றை கைப்பற்றியுள்ளதாகவும் கடற்படையின் ஊடகப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள், இழுவைப் படகு மற்றும் கைது செய்யப்பட்ட ஆறு நபர்களும் நேற்று (18) கொழும்பு துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment