அமைதியை சீர்குலைக்க முயற்சிப்போருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை : எச்சரிக்கை விடுத்துள்ள பாதுகாப்பு அமைச்சு - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 30, 2023

அமைதியை சீர்குலைக்க முயற்சிப்போருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை : எச்சரிக்கை விடுத்துள்ள பாதுகாப்பு அமைச்சு

(எம்.மனோசித்ரா)

மத ரீதியான பிரச்சினைகளை ஏற்படுத்தி அமைதியை சீர்குலைக்க முயற்சிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் மதங்களை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டில் மதப் பிரச்சினைகளை தூண்டிவிட்டு நிலவும் அமைதியான சூழ்நிலையை சீர்குலைக்க பல தரப்பினர் முயட்சித்து வருகின்றனர்.

அண்மைக்காலமாக முகம்கொடுத்த கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான பாதையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் முக்கியமான தருணத்தில், நாட்டில் மீண்டும் ஒரு நெருக்கடியை ஏற்படுவதற்கான தெளிவான அறிகுறிகள் தட்சமயம் காணக்கூடியதாக உள்ளது.

எனவே இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாட்டில் மதப் பிரச்சினைகளை தூண்டிவிட்டு நிலவும் அமைதியான சூழ்நிலையை சீர்குலைக்க பல தரப்பினர் முயற்சித்து வருகின்றனர். ஆரோக்கியமான சமூகமொன்றுக்கு மத ஸ்திரத்தன்மையை பேணுவதன் அவசியமாகும்.

தனி நபர் ஒருவரோ அல்லது குழுவினரோ மதவாத உணர்வுகளைத் தூண்டுவதற்கு அல்லது அந்த நோக்கத்துடன் செயல்பட முயற்சித்தால் அவர்களுக்கெதிராக, அரசியலமைப்பின் 9 சரத்து மற்றும் தண்டனை சட்டக் கோவையின் 291 (அ) , (ஆ) பிரிவுகளின் கீழ் கடுமையாக சட்டத்தை அமுல்படுத்த தயங்கப் போவதில்லை.

No comments:

Post a Comment