கடலில் நீராடச் சென்ற மாணவன் சடலமாக மீட்பு : தெய்வாதீனமாக உயிர் பிழைத்த ஏனைய இருவர் - News View

About Us

About Us

Breaking

Monday, May 15, 2023

கடலில் நீராடச் சென்ற மாணவன் சடலமாக மீட்பு : தெய்வாதீனமாக உயிர் பிழைத்த ஏனைய இருவர்

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு கடலிலிருந்து திங்கட்கிழமை (15) மாணவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பெரியகல்லாறு கடலில் ஞாயிற்றுக்கிழமை (14) மாலை 3 இளைஞர்கள் நீராடிக் கொண்டிருந்துள்ளனர். அதில் ஒருவரை கடலலை இழுத்துச் சென்ற நிலையில் ஏனைய இருவரும் தெய்வாதீனமாக உயிர் பிழைத்துள்ளனர்.

எனினும் கடலில் மூழ்கடிக்கப்பட்டவரை ஞாயிற்றுக்கிழமை (14) இரவு வரையில் தேடியும் கண்டுபிடிப்பாடாத நிலையில் திங்கட்கிழமை (15) காலை அவர் அக்கடலிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவர் பெரியகல்லாறு முதலாம் பிரிவின் பொற்கொல்லர் வீதியைச் சேர்ந்த 17 வயதுடைய பாலச்சந்திரன் லெசான் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவ்வாறு மீட்கப்பட்டவர் பெரியகல்லாற்றில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவர் எனவும், அவர் இவ்வருடம் கல்விப் பொதுத்தர சாதாரண தரப் பரீட்சைக்கும் தோற்றவுள்ளவர் எனவும் அவரது குடும்பத்தார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி பொலிசார் உடலத்தைப் பார்வையிட்டு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment