இலங்கை மத்திய வங்கி சட்டமூலம் மீதான விவாதம் ஒத்திவைப்பு : வாய்ப்ப்பை வீணடித்துவிட்டு தெரியாது என்று சொல்ல வேண்டாம் : திருத்தங்களை சமர்ப்பிக்க வருமாறு பிரதமர் அழைப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 9, 2023

இலங்கை மத்திய வங்கி சட்டமூலம் மீதான விவாதம் ஒத்திவைப்பு : வாய்ப்ப்பை வீணடித்துவிட்டு தெரியாது என்று சொல்ல வேண்டாம் : திருத்தங்களை சமர்ப்பிக்க வருமாறு பிரதமர் அழைப்பு

நிதியமைச்சின் ஆலோசனைக் குழுவில் இலங்கை மத்திய வங்கி சட்டமூலம் முன்மொழியப்படும் என்றும் அது இந்த வாரம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படாது என்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கடந்த வாரம் இலங்கை மத்திய வங்கி சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்திற்கான திகதிகளை பாராளுமன்ற அலுவல்கள் குழு நிர்ணயித்திருந்ததோடு, மே 11 ஆம் திகதி மு.ப. 9.30 மணி முதல் பி.ப. 6.00 மணி வரை இது தொடர்பான விவாதத்தை நடாத்த திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தற்போது முன்வைகப்பட்டுள்ள, இலங்கை மத்திய வங்கி சட்டமூல வரைவிற்கு பதிலாக, உயர் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட உறுதிமொழிகளுக்கு அமைய புதிய வரைவை சமர்ப்பிக்குமாறு கோரி எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் இன்று (09) பிரதமர் அலுவலகத்தில் கடிதம் ஒன்றை கையளித்துள்ளனர்.

அத்துரலியே ரத்தின தேரோ, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, கெவிந்து குமாரதுங்க, ஜயந்த சமரவீர, மொஹமட் முஸம்மில், வீரசுமண வீரசிங்க, அசங்க நவரத்ன ஆகியோர் இக்கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

இலங்கை மத்திய வங்கி சட்டமூலத்தில் திருத்தங்களை நிதி அமைச்சின் ஆலோசனைக் குழுவிடம் சமர்ப்பிக்க முன்வருமாறும் அந்த வாய்ப்ப்பை வீணடித்துவிட்டு அவைக்கு வந்து எங்களுக்குத் தெரியாது என்று சொல்ல வேண்டாமென பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளிடம் கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நாணயக்கார மற்றும் பேராசிரியர் ஜீ.எல்.பீர்ஸ் ஆகியோர் எழுப்பிய பல கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

எதிர்க்கட்சிகளின் தனிக் குழுவின் சார்பில் பாராளுமன்ற விவகாரக் குழுவிற்கு பேராசிரியர் ஜி.எல்.பீர்ஸ் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

இதன்போது அவர் தெரிவிக்கையில், கௌரவ சபாநாயகர் அவர்களே, இந்த விடயத்தை பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவும் எழுப்பினார்.

மரபுப்படி, நிதி அமைச்சகத்தின் ஆலோசனைக் குழு இன்று கூடுகிறது. மத்திய வங்கியின் ஆளுநரும் இதில் கலந்து கொள்ளவுள்ளார். இந்த நேரத்தில் எமது பிரதி அமைச்சர் சபையில் இருக்கிறார். இந்த சட்டமூலம் குறித்து விவாதிக்க அந்த கூட்டத்தில் எம்.பி.க்கள் பங்கேற்கலாம். இந்த சட்டம் தொடர்பான திருத்தங்களை உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

இதன்படி, சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அந்த திருத்தங்களை முன்வைப்பது மற்றும் அதற்கான சரத்துகள் மற்றும் சட்டத்தின் மீதான அதன் தாக்கம் குறித்து விவாதிக்க வாய்ப்பு உள்ளது. அதனால் தான் ஜனாதிபதி பின்பற்றும் குழு அமைப்பில் பின்பற்றி இந்த வாரம் பாராளுமன்றத்தில் இந்த சட்டமூலம் விவாதத்திற்கு உட்படுத்தப்படாது என நான் முன்னரே கூறினேன். ஆனால் இன்று 11.30 மணிக்கு பாராளுமன்ற அலுவல்கள் கூடும் போது எதிர்கட்சி தலைவர் அவர்களே அந்த தேதியை மாற்றுவது குறித்து பெரிய கருத்து வேறுபாடு இருக்காது என நினைக்கிறேன்.

ஆனால் பாராளுமன்றம் தொடர்பில் பல்வேறு குழுக்கள் உள்ளன. என்பதை வாசுதேவ நாணயக்கார மற்றும் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோருக்கு நான் கூற விரும்புகின்றேன்.

இப்போது ஆலோசனைக் குழுவுடன் வந்து விவாதிக்கும் வாய்ப்பை வீணடிக்க வேண்டாம்.

அதை வீணடித்துவிட்டு இந்த சபைக்கு வந்து எங்களுக்குத் தெரியாது என்று சொல்லாதீர்கள். அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார அவர்களே அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது உங்களுக்கும் எனக்கும் நன்றாகத் தெரியும்.

ஜீ.எல். பீரிஸ் அவர்களே, உங்கள் குழுவின் பெயர் என்ன என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது? குழுவின் பெயர் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. (சபையினர் ஏதோ சொல்கிறார்கள்) இல்லை.. உத்தர லங்கா, அந்த உத்தர லங்கா என்பது வேறு குழுவினர். எதிர்க்கட்சிகள் சார்பில் பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.எல். பீரிஸ் மிக சிரேஷ்ட சட்டத்தரணி ஆவார்.

எனவே, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு மட்டுமல்ல, நிதி அதிகாரம் தொடர்பான நாடாளுமன்றத்தின் முடிவுகளையும் விவாதிப்போம். தற்போது இந்த வாரத்தில் கொண்டு வர எதிர்பார்த்ததை கொண்டு வர ஜனாதிபதியும் சம்மதம் தெரிவித்துள்ளார். எனவே இதனை தள்ளிப் போடுங்கள். என்றார்.

No comments:

Post a Comment