கண்ணாடிப் பெட்டி உடைக்கப்பட்டு புத்தர் சிலை கவிழ்ப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, May 29, 2023

கண்ணாடிப் பெட்டி உடைக்கப்பட்டு புத்தர் சிலை கவிழ்ப்பு

காலி மாவட்டத்தின், இமதுவ அகுலுகஹா பிரதேசத்தில் காணப்படும் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ள கண்ணாடி பெட்டி ஒன்று உடைக்கப்பட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை கவிழ்க்கப்பட்டுள்ளதாக இமதுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும் புத்தர் சிலைக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த புத்தர் சிலையானது மலர் தூவப்பட்டிருந்த பகுதியில் முகம் குப்புற வீழ்ந்து காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பிரதேச மக்கள் பலர் பொலிஸுக்கு நேற்றைய தினம் தகவல் வழங்கியதனையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றா்.

No comments:

Post a Comment