இளம் பிக்குகள் துஸ்பிரயோகம் செய்யப்படுவதை தடுக்குமாறு தேசிய சிறுவர் துஸ்பிரயோக அதிகார சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
பௌத்த ஆலயங்களில் இளம் பிக்குகளிற்கு எதிரான தாக்குதல்கள், வன்முறைகள், பாலியல் துஸ்பிரயோகங்கள் அதிகரித்து வருவது குறித்து சுட்டிக்காட்டியுள்ள தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, இவ்வாறான சம்பவங்களை தடுப்பதற்கு மதகுருமார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பௌத்த ஆலயங்களில் இளம் பிக்குகளை துஸ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்களிற்கு எதிராக ஏற்கனவே நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ள சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை குற்றவியல் முறைப்பாடுகள் கிடைத்தால் பொலிஸார் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தேசிய சிறுவர் அதிகார சபை என்ற அடிப்படையில் சிறுவர்களிற்கு எதிரான வன்முறையில் ஈடுபடுபவர்களிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரம் உள்ளது என தெரிவித்துள்ள அதிகார சபையின் தலைவர் பாதிக்கப்பட்டவர் பௌத்த மகுருவா அல்லது சாதாரண நபராக என நாங்கள் பார்ப்பதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டது சிறுவர் என்றால் நாங்கள் அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் புசல்லாவையில் 8 வயது பிக்குவை 14-15 வயதுடைய மூன்று பிக்குகள் சித்திரவதை செய்துள்ளனர். அவர்கள் பாலியல் ரீதியில் எந்த குற்றமும் இழைக்கவில்லை, ஆனால் தாக்குதலை மேற்கொண்டு மோசமான சித்திரவதையில் ஈடுபட்டுள்ளனர். இது குற்றவியல் நடவடிக்கை இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment