(எம்.ஆர்.எம்.வசீம்)
கல்வி பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கையில் இன்று முதல் ஈடுபடுவதற்கு பல்கலைக்கழக பேராசிரியர்களின் சங்கம் தீர்மானித்துள்ளது.
பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கம் நேற்று நடத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ஷஷ்ம பன்னேஹெக இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கல்வி பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கையில் பல்கலைக்கழக பேராசிரியகள் ஈடுபடாமல் வந்தமை தொடர்பில் மக்கள் மத்தியில் பிழையான தகவல் சென்றிருந்தது. என்றாலும் எமது நியாயமான கோரிக்கைகள் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய தேவை எமக்கு இருந்தது.
எமது பிரதான கோரிக்கையாக இருந்தது வரிக் கொள்கையில் பாதிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றே கேட்டிருந்தோம். என்றாலும் இதுவரை எமது கோரிக்கை நிறைவேற்றப்படவி்ல்லை. என்றாலும் பெற்றோர்கள் மற்றும் மக்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு விடைத்தால் மதிப்பீட்டு நடவடிக்கையில் இன்று முதல் ஈடுபடுவதற்கு எமது சங்கம் தீரமானித்தது.
அத்துடன் மாணவர்கள் தொடர்பில் மிகவும் அக்கறையும் கதைத்துவரும் ஜனாதிபதி மற்றும் அரசாங்கம். இந்த பிரச்சினையை கலந்துரையாடி தீர்த்துக் கொள்ள முயற்சிக்கவில்லை. ஜனாதிபதி இதுவரை எம்முடன் கலந்துரையாட சந்தர்ப்பம் வழங்கவில்லை. தற்போது ஜனாதிபதி நாட்டில் இல்லை. ஜனாதிபதி நாடு திரும்பியதும் கலந்துரையாடுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் இரண்டு மாதங்களாகியும் ஜனாதிபதி எங்களுடன் கலந்துரையாட நினைக்கவில்லை.
அத்துடன் எமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை. மாணவர்களுக்காக நாங்கள் விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்திருக்கிறோம். அதனால் இந்த போராட்டத்தை நாங்கள் இன்னும் கைவிடவில்லை. இதனை வேறு வழியில் முன்னெடுத்துச் செல்ல தீர்மானித்திருக்கிறோம் என்றார்.
No comments:
Post a Comment