ஜெரோம் பெர்ணாண்டோ விமான நிலையத்தில் கைதாவார் - பொலிஸ் பேச்சாளர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 17, 2023

ஜெரோம் பெர்ணாண்டோ விமான நிலையத்தில் கைதாவார் - பொலிஸ் பேச்சாளர்

மதங்களை அவமதிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய பிரசங்கம் வழங்கிய கிறிஸ்தவ மத போதகர் ஜெரோம் பெனாண்டோ இலங்கை வந்தடைந்ததும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்படுவார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

மத நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையிலான குறித்த விடயம் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டிருந்தார்.

ஜனாதிபதியின் ஆலோசகர், ஜனாதிபதி செயலணியின் பிரதம அதிகாரி சாகல ரத்நாயக்கவிடம் இவ்வுத்தரவை பிறப்பித்திருந்தார்.

அதற்கமைய அவருக்கு எதிராக விசாரணைகளை மேற்கொண்டு வழக்குப் பதிவு செய்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவர் நாட்டை விட்டுச் செல்வதை தடுக்கும் வகையில் கோட்டை நீதவான் நீதிமன்றில் உத்தரவை நேற்று (16) பெற்றிருந்தனர்.

இந்நிலையில், அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (14) தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுன்றது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கிறிஸ்தவ மத போதகர் என தம்மை அடையாளப்படுத்தும் ஜெரோம் பெனாண்டோ எனும் நபர் ஆற்றிய பிரசங்கம் சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. 

அதில், பௌத்தம், இந்து, இஸ்லாம் உள்ளிட்ட மத நம்பிக்கைகளை அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டப்பட்டுள்ளார்.

இதேவேளை, சிங்கப்பூர் சென்றுள்ள பாதிரியார் ஜெரோம் பெனாண்டோ தனது உத்தியோகபூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் புகைப்படம் மற்றும் இடுகையொன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த இடுகைக்கு அமைய, தான் தற்போது ஏற்கனவே திட்டமிடப்பட்ட உத்தியோகபூர்வ விடயங்கள் தொடர்பில் வெளிநாடு சென்றுள்ளதாகவும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (21) இலங்கை திரும்பவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment