250 மில்லியன் டொலர் இலஞ்ச மோசடி : நீதிமன்றிற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ள CID - News View

About Us

About Us

Breaking

Thursday, May 18, 2023

250 மில்லியன் டொலர் இலஞ்ச மோசடி : நீதிமன்றிற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ள CID

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ தொடர்பில் இலங்கைக்கு ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு வழங்குவதற்கான வழக்கை தாமதப்படுத்தும் வகையில் 250 மில்லியன் டொலர் இலஞ்ச மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் தகவல் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றிற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

நேற்றையதினம் (18) கொழும்பு கோட்டை நீதவான் திலிண கமகே முன்னிலையில் B அறிக்கை மூலம் CID யினர் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

ஊடகங்கள் ஊடாக பரவிய குறித்த செய்தி தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மனுவொன்றை தாக்கல் செய்து, விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கோட்டை நீதவான் திலிண கமகே முன்னிலையில் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்ட நீதவான், அதுவரை வழக்கு கோப்பை மூடி வைக்குமாறு உத்தரவிட்டார்.

2021 இல் இலங்கைக கடல் எல்லைக்குள் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பிடித்ததன் காரணமாக பல்வேறு வகையில் கடல் மற்றும் கடற்கரை சூழல் பாதிப்பு, அதனுடன் தொடர்புபட்ட தொழிலாளர்கள், விலங்கினங்கள் பாதிப்புக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.

குறித்த விடயம் தொடர்பில் சட்ட மாஅதிபர் திணைக்களத்தால் தற்போது சிங்கப்பூரில் வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுபாஷினி சேனாநாயக்க

No comments:

Post a Comment