துபாயில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சந்தேகத்திற்கிடமான கொள்கலன் ஒன்றிலிருந்து ரூ. 16 கோடியே 40 இலட்சம் (ரூ. 164,000,000) பெறுமதியான ஷீஷா புகைத்தல் பொருள் மீட்கப்பட்டுள்ளதாக, இலங்கை சுங்கத் திணைக்களத்ததின் பேச்சாளரும் அதன் பணிப்பாளருமான சுதத்த சில்வா தெரிவித்தார்.
இலங்கை சுங்கத் திணைக்களத்தின் துறைமுகக் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் சேகரிக்கப்பட்ட புலனாய்வுத் தகவலை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணையின் பின்னர் சந்தேகத்திற்கிடமான கொள்கலன் ஒன்றை சோதனை செய்தபோது, அதில் நீராவியுடன் புகைக்கும் ஹூக்கா புகையிலை (Hookah Tobacco) அடங்கிய பொதிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தலா 50 கிராம் கொண்ட 160,200 சிறிய பொதிகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக, சுதத்த சில்வா தெரிவித்தார். இதன் மொத்த நிறை 8,010 கிலோ கிராம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன் சந்தைப் பெறுமதி சுமார் ரூ. 164,000,000 என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கலவையில் 0.05% நிக்கொட்டின் உள்ளதோடு, இது இலங்கைக்கு இறக்குமதிக் கட்டுப்பாட்டுக்குள் உள்ளடங்கும் ஒரு பொருளாகும். போலி நிறுவனம் ஒன்றின் பெயரில் இந்த கொள்கலன் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்கத் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.
No comments:
Post a Comment