போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து ஜோர்ஜியாவுக்கு பயணிக்க முயன்ற கிராம சேவை அதிகாரி ஒருவர் உள்ளிட்ட 11 பேர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று கைது செய்யப்பட்டனர்.
இவர்களுள் கிராம சேவை அதிகாரியொருவர் உட்பட ஒன்பது ஆண்களும் மற்றும் இரண்டு பெண்களும் உள்ளடங்குவதாக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விமான நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த சி.ஐ.டி.யினருக்கு கிடைத்த தகவலுக்கிணங்க, இவர்கள் மேற்படி 11 பேரும் கைதுசெய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட கிராம சேவை அதிகாரி 36 வயதுடைய மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்தவரென பொலிஸார் தெரிவித்தனர்.
ஏனைய நபர்கள் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் பகுதிகளைச் சேர்ந்த 31, 36, 33, 34 மற்றும் 35 வயதுடையோர்களாவர்.
கைதானவர்கள் தொடர்பில் சி.ஐ.டி. பிரிவினரின் கட்டுநாயக்க விமான நிலைய பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment