கடும் வெப்பத்தினால் ஏற்படும் உடல் நல பாதிப்புகளை தவிர்ப்பதற்காக சுகாதார மேம்பாட்டு பணியகம் பொதுமக்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
இதன்படி அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு பணியகம் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
அதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1.தாகம் ஏற்படும் வரை காத்திருக்காமல் தொடர்ச்சியாக நீர் மற்றும் இளநீர் போன்றவற்றை அருந்துங்கள்.
2.தாகம் ஏற்பட்டால் சோடா போன்ற பானங்களை அருந்துவதை தவிர்த்துக் கொள்ளவும்.
3.பயணம் செய்யும்போது அருந்துவதற்கு நீரை உங்களுடன் வைத்திருங்கள்.
4.பகல் 11 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை குறைத்துக் கொள்ளுங்கள்.
5.வெயில் காலத்திற்கு ஏற்ற பருத்தி ஆடைகளை அணியுங்கள்.
No comments:
Post a Comment