அமைச்சுப் பதவி கிடைத்தால் ஏற்றுக் கொள்ளத் தயார் - ராஜித சேனாரத்ன - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 5, 2023

அமைச்சுப் பதவி கிடைத்தால் ஏற்றுக் கொள்ளத் தயார் - ராஜித சேனாரத்ன

(எம்.ஆர்.எம்.வசீம்)

எதிர்வரும் காலங்களில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டு சுகாதார அமைச்சுப் பதவி கிடைத்தால் அதனை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

பண்டாரகம பிரதேசத்தில் புதன்கிழமை (5) தனியார் வைத்தியசாலையொன்றை பார்வையிடச் சென்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 2015 இல் நாங்கள் ஆளும் கட்சியில் இருந்து எதிர்க்கட்சிக்கு தாவியதாலே எதிர்க்கட்சித் தலைவர் முதல் தடவையாக அமைச்சரானார். நாங்கள் அணி மாறாவிட்டால் ஐக்கிய தேசிய கட்சி அந்த நேரத்தில் வெற்றி பெற்றிருக்காது.

அதனால் தற்போதுள்ள நிலையில் அமைச்சரவை மாற்றம் ஏற்பட்டு, எனக்கு சுகாதார அமைச்சுப் பதவியை வழங்கினால் அதனை ஏற்றுக் கொள்ள நான் தயார்.

நான் இவ்வாறு தெரிவிப்பதன் மூலம் ஊடகங்களில் வரும் பதிலை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்க முடியும்.

அதேபோன்று சிலர் அரசியலுக்காக எடுக்கும் தீர்மானம் மற்றும் சிலருக்கு அது பணத்துக்காக எடுத்த தீர்மானமாக காணலாம்.

பணத்துக்காக தீர்மானம் எடுப்பவர்களும் இருக்கலாம். ஆனால் நாங்கள் எப்போதும் தீர்மானம் ஒன்றை எடுத்தால் அது அரசியலை பார்த்தே தீர்மானம் மேற்கொள்வோம். அதனால்தான் மக்கள் எங்களை ஏற்றுக் கொள்கின்றனர் என்றார்.

No comments:

Post a Comment