நெடுந்தீவு ஐவர் படுகொலை : ஆறாவது நபரும் உயிரிழப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, April 27, 2023

நெடுந்தீவு ஐவர் படுகொலை : ஆறாவது நபரும் உயிரிழப்பு

யாழ்ப்பாணம், நெடுந்தீவில் நகைகளை அபகரிக்கும் நோக்குடன் கொடூரமாக நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி உயிரிழந்துள்ளார்.

100 வயது மூதாட்டியான பூரணம் இன்று (27) வியாழக்கிழமை மாலை உயிரிழந்தார். அவரது இருதயம் செயலிழந்ததனால் உயிரிழந்தார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை அதிகாலை ஒரே வீட்டில் வசிக்கும் 6 பேர் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் 3 பெண்களும், 2 ஆண்களும் உயிரிழந்தனர். 

100 வயதான மூதாட்டி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

குறித்த கொலைச் சம்பவத்தில் நகைகளுடன் தப்பித்த பிரதான சந்தேகநபர் புங்குடுதீவில் வைத்து அன்றிரவே கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த தாக்குதலின் போது தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த நாயும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ். நிருபர் பிரதீபன்

No comments:

Post a Comment