ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் மீண்டும் இணைந்து பயணிக்கும் - ருவான் விஜேவர்தன - News View

About Us

About Us

Breaking

Monday, April 3, 2023

ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் மீண்டும் இணைந்து பயணிக்கும் - ருவான் விஜேவர்தன

(எம்.மனோசித்ரா)

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து மாத்திரமல்ல, ஏனைய பல கட்சிகளிலிருந்தும் பலர் எம்முடன் இணையவுள்ளனர். முற்பகலில் ஜனாதிபதியை விமர்சிப்பவர்கள் பிற்பகலில் அவருடன் இணைவதற்கு விருப்பம் தெரிவிக்கின்றனர் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்தார்.

அத்தோடு வெகுவிரைவில் ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் மீண்டும் இணைந்து பயணிக்கும். இவ்விரு கட்சிகளும் இணைவது நாட்டுக்கு நன்மையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அநுராதபுரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தபோதும் ஐக்கிய தேசிய கட்சியே அதனை மீளக் கட்டியெழுப்பியது.

எனவே இம்முறை இடம்பெற்ற சம்பவங்களின் அடிப்படையிலும் ஐக்கிய தேசியக் கட்சிவிற்கு சிறந்த எதிர்காலம் காணப்படுகிறது என்பது தெளிவாகிறது.

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து மாத்திரமின்றி மேலும் பல கட்சிகளிலிருந்தும் எம்முடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

முற்பகல் வேளைகளில் ஜனாதிபதியை விமர்சிப்பவர்கள், பிற்பகலில் எம்மிடம் அவரைப் புகழ்ந்து அவருடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய இனிவரும் மாதங்களில் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து மாத்திரமின்றி மேலும் பல கட்சிகளிலிருந்தும் பலர் எம்முடன் இணைவர்.

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து சென்றவர்களே ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார கொள்கைகளையே அவர்களும் கொண்டுள்ளனர்.

ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் மீண்டும் இவ்விரு குழுக்களும் ஒன்றிணைய வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நான் இருக்கின்றேன்.

விரைவில் அது நடைபெறும் என்று நம்புகின்றேன். எதிர்க்கட்சி தலைவரும் இந்த நிலைப்பாட்டுக்கு வருவார் என்று எண்ணுகின்றேன்.

இவ்விரு கட்சிகளும் ஒன்றிணைவது நாட்டுக்கு நல்லதாகும். இதன்போது பதவிகளை தியாகம் செய்யும் நிலைமை ஏற்பட்டால் அதற்கும் நாம் தயாராகவே இருக்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment