(இராஜதுரை ஹஷான்)
வருடாந்த விலை சூத்திரத்துக்கு அமைய எதிர்வரும் ஜூலை மாதம் பேருந்து கட்டணத்தை மீண்டும் குறைக்க முடியும். பேருந்து உதிரிப்பாகங்கள் விலையை குறைப்பதாக அரசாங்கம் வாக்குறுதி வழங்கியுள்ளது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் புதன்கிழமை (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 1500 பேருந்துகள் தூர பிரதேச சேவைக்காக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன. கடந்த காலங்களை காட்டிலும் தற்போது பேருந்து சேவையை பயன்படுத்தும் பொதுப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
12.9 சதவீதத்தால் பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. வருடாந்த விலை சூத்திரத்துக்கு அமைய எதிர்வரும் ஜூலை மாதம் பேருந்து கட்டணத்தை மீண்டும் குறைக்க முடியும். எதிர்வரும் காலங்களில் எரிபொருள் விலை குறைவடையும் என எதிர்பார்க்கிறோம்.
கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் கணிசமான அளவு குறையும் பட்சத்தில் அத்தியாசிய சேவைத்துறைகளின் கட்டணம் குறைவடையும். இதற்கமைய பேரூந்து கட்டணம் குறைவடையும். பேருந்து உதிரிபாகங்களின் விலையை குறைப்பதாக அரசாங்கம் வாக்குறுதி வழங்கியுள்ளது, ஆகவே அதன் பயனை நாட்டு மக்களுக்கு வழங்குவோம் என்றார்.
No comments:
Post a Comment