(எம்.மனோசித்ரா)
பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை தனியார் மயப்படுத்த முயற்சிப்பதாக குறிப்பிட்டு கடந்த வாரம் தொழிற்சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போது, தற்போது சேவையில் இல்லாதோர் எவ்வாறு கொலன்னாவ முனையத்துக்குள் பலவந்தமாக பிரவேசித்தனர் என்பது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும்படி மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
குற்றப் புலனாய்வு பிரிவினர் இது குறித்த விசாரணைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த வாரம் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கையின்போது கொலன்னாவ உள்ளிட்ட எரிபொருள் முனையங்களுக்குள் சேவையிலிருந்து விலகியவர்களும், ஓய்வு பெற்றவர்களும் பிரவேசித்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டதாக அண்மையில் அமைச்சர் கஞ்சன குறிப்பிட்டிருந்தார். இந்நிலையிலேயே அவர் இவ்வாறு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
No comments:
Post a Comment