நீதிமன்றத்தில் பெண் சட்டத்தரணிகளின் உடையில் திருத்தம் செய்து அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
2023 மார்ச் 30 திகதியிடப்பட்ட குறித்த அதி விசேட வர்த்தமானி மூலம், பிரதம நீதியரசர் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளினால் குறித்த திருத்தம் வெளியிடப்பட்டுள்ளது.
பெண் சட்டத்தரணிகளுக்கான உடை தொடர்பான 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 07ஆம் திகதி 1/4 இலக்க அதி விசேட வர்த்தமானி அறிவித்தலின், 1978ஆம் ஆண்டின் நீதிபதிகளினதும் சட்டத்தரணிகளினதும் நீதிமன்ற உடை தொடர்பான விதிகளின் 7ஆம் விதியை நீக்கி விட்டு அதற்கு பதிலாக புதிய விதி அறிமுகப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 2018, ஒக்டோபர் 05 ஆந் திகதிய 2091/72 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 2018 ஆம் ஆண்டின் நீதிபதிகளினதும் சட்டத்தரணிகளினதும் நீதிமன்ற உடைகள் பற்றிய விதிகள் இத்தால் ஒழிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய,
7. (1) பெண் சட்டத்தரணிமாரின் நீதிமன்ற உடை பின்வருமாறிருத்தல் வேண்டும்.
(அ) வெள்ளை, கறுப்பு, வெளிறிய வெண்மை, சாம்பல் அல்லது ஊதா நிறத்திலான சேலை மற்றும் சட்டை
அல்லது
(ஆ) வெளளை நிற மேற் சட் டை, கறுப்புநிற கோற் மற்றும் காலணிகளுடன் கறுப்பு நிற காற்சட்டை
அல்லது
(இ) வெள்ளை நிற மேற்சட்டை, கறுப்புநிற கோற் மற்றும் காலணிகளுடனான கறுப்பு நிற பாவாடை.
(2)
(அ) (1) ஆம் உபவிதியின் (ஆ) என்னும் பந்தியில் குறிப்பீடு செய்யப்பட்ட காற்சட்டையின் நீளம் கணுக்கால் வரை இருத்தல் வேண்டும்.
(ஆ) (1) ஆம உபவிதியின ; (இ) என்னும் பந்தியில் குறிப்பீடு செய்யப்பட்ட பாவாடையின் நீளம் அமரும் போது முழங்காலுக்குக் கீழ் இருத்தல் வேண்டும்.
(இ) (1) ஆம் உபவிதியின் (ஆ) மற்றும் (இ) என்னும் பந்திகளில் குறிப்பீடு செய்யப்பட்ட மேற்சட்டை கழுத்துவரை அணியப்பட்டு நீண்ட கையுடையதாகவிருத்தல் வேண்டும்.
No comments:
Post a Comment