கடலில் மிதந்த நிலையில் 6 கோடி 75 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப் பொருள் மீட்பு - News View

About Us

About Us

Breaking

Monday, April 3, 2023

கடலில் மிதந்த நிலையில் 6 கோடி 75 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப் பொருள் மீட்பு

இலங்கை கடற்படையினரால் நேற்றையதினம் (02) தலைமன்னார், மணல்பாறை அண்டிய கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, ​​கடலில் மிதந்த 4 கிலோவிற்கும் அதிகமான (ஈரமான எடை) ஐஸ் போதைப் பொருள் (Crystal Methamphetamine) கைப்பற்றப்பட்டுள்ளது.

வடமத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பலான தம்மன்னா மூலம் நேற்று தலைமன்னார், மணல்பாறைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, ​​மிதந்து கொண்டிருந்த கோணியொன்றை அவதானித்து அதனை சோதனையிட்டபோது, அதில் 4 பொதிகளில் அடைக்கப்பட்ட 4 கிலோ 500 கிராம் (ஈரமான எடை) ஐஸ் போதைப் பொருளை (Crystal Methamphetamine) கடற்படையினர் மீட்டுள்ளனர்.

இந்த ஐஸ் போதைப் பொருளின் (Crystal Methamphetamine) தெரு மதிப்பு ரூபா 67.5 மில்லியன் (ரூ. 6 கோடி 75 இலட்சம்) இற்கும் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது .

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப் பொருள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் வரை கடற்படையின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment