இலங்கை கிரிக்கெட்டுக்கு சனத் தலைமையில் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு நியமனம் - News View

About Us

About Us

Breaking

Sunday, April 2, 2023

இலங்கை கிரிக்கெட்டுக்கு சனத் தலைமையில் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு நியமனம்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு 5 பேர் கொண்ட தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அதி விசேட வர்த்தமானி அறிவித்தலொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய குறித்த குழுவின் தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரும் நட்சத்திர வீரருமான சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்

குறித்த குழு வருமாறு
சனத் ஜயசூரிய (தலைவர்)
பர்வீஸ் மஹரூப்
கபில விஜேகுணவர்தன
சரித் சேனாநாயக்க
அசந்த டி மெல்

No comments:

Post a Comment