நாளை நள்ளிரவு (05) முதல் 12.5kg லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை சுமார் ரூ. 1,000 இனால் குறைக்கப்படும் என, லிட்ரோ நிறுவன தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அறிவிப்பு நாளை (04) வெளியிடப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை குறைவடைந்துள்ளமை மற்றும் டொலருடன் இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், இவ்விலைக் குறைப்பை மேற்கொண்டு, மக்களுக்கு அதன் பலனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நடவடிக்கை சமையல் எரிவாயு விலைச்சூத்திரத்திற்கு அமைய மேற்கொள்ளப்படுமெனவும், அது தொடர்பில் நாளை அறிவிக்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, மாதாந்த விலைச்சூத்திர எரிபொருள் திருத்தத்திற்கு அமைய, கடந்த மாதம் Litro சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment