பறந்து கொண்டிருந்த விமானத்தின் கதவை திறக்க முற்பட்டவர் கைது - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 7, 2023

பறந்து கொண்டிருந்த விமானத்தின் கதவை திறக்க முற்பட்டவர் கைது

பறந்து கொண்டிருந்த விமானத்தில் கதவை திறக்க முற்பட்டதுடன், விமான ஊழியர் ஒருவரை தாக்க முயன்ற குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

33 வயதான பிரான்சிஸ்கோ சேவேரோ டொரேஸ் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர், லொஸ் ஏஞ்சல்ஸிலிருந்து பொஸ்டன் நகருக்குப் பறந்து கொண்டிருந்த யுனைடெட் எயார்லைன்ஸ் விமானமொன்றின் அவசரநிலைக் கதவை திறப்பதற்கு முற்பட்டார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பின்னர் இந்நபரை பயணிகளும் விமான ஊழியர்களும் மடக்கிப்பிடித்தனர். இதன்போது உடைந்த கரண்டி ஒன்றினால் விமான ஊழியர்களைத் தாக்குவதற்கு இவர் முற்பட்டார் எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நபர் விமானத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளதால், விமானத்தை அவசரமாக தரையிறக்க வேண்டும் என விமானியிடம் விமான ஊழியர்கள் கூறினர்

கடந்த ஞாயிற்றுக்கிழமை பொஸ்டன் நகரில் விமானம் தரையிறங்கியவுடன் அவர் கைது செய்யப்பட்டார்.

பிரான்சிஸ்கோ சேவேரோ டொரெஸ் விசித்திரமாக நடந்து கொண்டார் எனவும், இவ்விமானம் பறக்க ஆரம்பிப்பதற்கு முன்னரே, அவசரநிலைக் கதவு எங்கு உள்ளது என சக பயணிகளிடம் அவர் கேட்டார் எனவும் செய்தி வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment