விடைத்தாள் திருத்தும் அதிகாரிகளுக்கு கொடுப்பனவு வழங்க அனுமதி - News View

About Us

About Us

Breaking

Saturday, March 4, 2023

விடைத்தாள் திருத்தும் அதிகாரிகளுக்கு கொடுப்பனவு வழங்க அனுமதி

2022 கல்வி பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபடவுள்ள ஆசிரியர்களுக்கான நாளாந்த கொடுப்பனவை 2,000 ரூபாய் வரை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அது தொடர்பில் நேற்று (03) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பரீட்சைகள் திணைக்களம், கல்வி பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பிடும் பணிகளுக்கு ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் இணையம் மூலம் ஏற்றுக் கொள்ளப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதி வாய்ந்தோர் www.doenets.lk இணையத்தளம் ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என்பதுடன், விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கான கால எல்லை எதிர்வரும் 8ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தாமதமடைவதனால் 2022 உயர் தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதும் தாமதமாகிறது.  இதனால் தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.

கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை விடைத்தாள்களை திருத்தும் நடவடிக்கையின்போது, திருத்த வேலைகளில் ஈடுபடும் அதிகாரிகள் மத்தியில் பல்வேறு சிக்கல்கள் காணப்பட்ட நிலையில், அதற்குத் தீர்வு காணப்பட்டு அவர்களுக்கான கொடுப்பனவை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment