பயணிகளுக்கும், பண்டங்களுக்குமான பொதுப் போக்குவரத்தை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
சுங்கக் கட்டளைச் சட்டத்தின்படி, வரைவிலக்கணம் கூறப்பட்ட ஏதேனும் துறைமுகத்தினுள் இருக்கும் கலத்திலிருந்து உணவுப் பொருள் அல்லது பானம், அல்லது நிலக்கரி, எண்ணெய், எரிபொருள் என்பவற்றுள் எவற்றையும் வெளியேற்றுதல், கொண்டு செல்லல், தரையிறக்குதல், களஞ்சியப்படுத்தல், விநியோகித்தல், அகற்றுதல் என்பதற்காக, தெருக்கள், பாலங்கள், மதகுகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், புகையிரதப் பாதைகள் உட்பட தெரு மூலமான, புகையிரத மூலமான அல்லது வான் மூலமான போக்குவரத்துச் சேவைகளுக்கான வசதிகளை வழங்குதலும் பேணுதலும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
1. பயணிகளுக்கும் பண்டங்களுக்குமான பொதுப் போக்குவரத்து சேவைகள்.
2. (235ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் நோக்கங்களுக்காக வரைவிலக்கணம் கூறப்பட்ட, ஏதேனும் துறைமுகத்திலுள்ள கப்பலில் இருந்து உணவுகள் மற்றும் பானங்கள் அல்லது நிலக்கரி, எண்ணெய், எரிபொருள் போன்றவற்றுள் எந்தவொன்றையும் இறக்குதல், கொண்டு செல்லல், ஏற்றிச் செல்வது, ஏற்றுதல், களஞ்சியப்படுத்தல், விநியோகம் அகற்றுதல்.
3. வீதிகள், பாலங்கள், மதகுகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், புகையிரத பாதைகள் உள்ளிட்ட வீதிகள் மூலமான, புகையிரதம் அல்லது விமானம் மூலமான போக்குவரத்து சேவைகளுக்கு அவசியமான வசதிகளை வழங்குதல் மற்றும் பராமரித்தல்.
ஆகியன உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment