நாட்டை பொறுப்பேற்கக் கூடிய ஆற்றல் கொண்ட இளம் சமுதாயம் உருவாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை : நாட்டு மக்கள் என்னை சாடாமல் இருப்பது வியப்பாகவுள்ளது என்கிறார் சந்திரிக்கா - News View

About Us

About Us

Breaking

Monday, February 27, 2023

நாட்டை பொறுப்பேற்கக் கூடிய ஆற்றல் கொண்ட இளம் சமுதாயம் உருவாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை : நாட்டு மக்கள் என்னை சாடாமல் இருப்பது வியப்பாகவுள்ளது என்கிறார் சந்திரிக்கா

(எம்.வை.எம்.சியாம்)

நாட்டில் இன்றைய அரசியல்வாதிகள் மிகவும் அற்பத்தனமாக செயற்படுகின்றனர். எனினும், நாட்டை பொறுப்பேற்கக் கூடிய ஆற்றல் கொண்ட இளம் சமுதாயம் உருவாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

அத்தனகல்ல பிரதேசத்தில் சனிக்கிழமை (25) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை நான் ராஜபக்ஷக்களிடம் ஒப்படைத்துவிட்டு சென்ற காலம் தொடக்கம் இன்று வரையில் கட்சியில் இருந்தவர்கள் கட்சியை இல்லாமல் செய்துள்ளனர்.

ராஜபக்ஷவின் பின்னர் தற்போது கட்சியின் பொறுப்பினை மைத்திரியிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். அவரும் கட்சியை இல்லாமல் செய்துள்ளார். இருந்தபோதிலும் நாட்டு மக்கள் என்னை சாடாமல் இருப்பது வியப்பாகவுள்ளது.

ராஜபக்ஷக்களை விரட்டுவதற்காக மைத்திரியை கொண்டு வந்ததற்கு என்னையே நீங்கள் குற்றம் சுமத்த வேண்டும். இன்று நாடும் கட்சியும் இவ்வாறு இருக்க இவரும் ஒரு காரணமாகும்.

மைத்திரி பொருத்தமற்றவர். மைத்திரி பதவிக்கு வந்த பின்னர் அவருக்கு பைத்தியம் பிடிக்கும் என்று எனக்கு தெரியாது.

மைத்திரிபால சிறிசேன நாட்டை வங்குரோத்து அடையச் செய்துள்ளார். அதேபோன்று கட்சியையும் வங்குரோத்து அடைய செய்துள்ளார்.

நாங்கள் எல்லோரும் இல்லாமல் செய்யப்பட்டுள்ளோம். அன்று இனிமேலும் ராஜபக்ஷக்களுடன் இணைந்து செல்ல வேண்டாம் என்று கூறினேன். இதை கூறியதையடுத்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டேன்.

எனக்கு நண்பர்களை விட நாடுதான் முக்கியம். ஆனால் எனது கட்சியே அதற்கு தடையாக இருந்தால் நாட்டை முன்னேற்ற கட்சியை மறக்க வேண்டும். தற்போது எங்களால் முடிந்த வரை கட்சியுடன் இணைந்து செயல்படுகிறோம் என்றார்.

No comments:

Post a Comment