(இராஜதுரை ஹஷான்)
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் எதிர்வரும் 03 ஆம் திகதி தேசிய தேர்தல் ஆணைக்குழு ஒரு உத்தியோகப்பூர்வமான தீர்மானத்தை அறிவித்ததன் பின்னர், சம்பளமில்லாமல் விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்கள் தொடர்பில் ஒரு தீர்மானத்தை எடுக்க முடியும், இவ்விடயம் குறித்து சட்ட ஆலோசனை கோர தீர்மானிக்கப்பட்டுள்ளது என பிரதமர் தினேஷ் குணவர்தன ஆளும் தரப்பின் உறுப்பினர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கும், ஆளும் தரப்பின் உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை (26) கொழும்பில் இடம்பெற்றபோது பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சம்பளமில்லாத அரச சேவையாளர்கள் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டுள்ளார்கள்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக 7100 இற்கும் அதிகமானோர் சம்பளமில்லாத விடுமுறையில் உள்ளார்கள். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிச்சமயற்ற தன்மையில் காணப்படும் பின்னணியில் இவர்கள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் உள்நாட்டலுவல்கள் மற்றும் பொது நிர்வாக அமைச்சரும்,பிரதமருமான தினேஷ் குணவர்தனவிடம் வலியுறுத்தினார்கள்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறும் வரை சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்கள் சேவையில் ஈடுபட முடியாது என தேசிய தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையில் இவ்விடயம் தொடர்பில் ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் அரச சேவைகள் விடயதானத்திற்கு பொறுப்பான அமைச்சரான பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் வலியுறுத்தியுள்ளார்கள்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் எதிர்வரும் 03 ஆம் திகதி தேசிய தேர்த ஆணைக்குழு ஒரு தீர்மானத்தை அறிவித்ததன் பின்னர் சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்கள் தொடர்பில் ஒரு தீர்மானம் எடுக்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறும் வரை சேவையில் ஈடுபட அனுமதி வழங்க வேண்டும், இவ்விடயம் தொடர்பில் தேசிய தேர்தல் ஆணைக்குழுவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் வலியுறுத்தியுள்ளார்கள். இவ்விடயம் தொடர்பில் சட்ட ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment