இரண்டாவது தடவையும் தோற்கடிக்கப்பட்டது வரவு செலவுத் திட்டம் - News View

About Us

About Us

Breaking

Monday, February 27, 2023

இரண்டாவது தடவையும் தோற்கடிக்கப்பட்டது வரவு செலவுத் திட்டம்

யாழ் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஆறு மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

யாழ் மாநகர சபையின் 2023 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (28) மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட்டால் இரண்டாவது தடவையாக சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 16 வாக்குகளும், எதிராக 22 வாக்குகளும் பதிவாகின.

45 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் யாழ் மாநகர சபையில் ஒருவர் உயிரிழந்த நிலையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் 16 உறுப்பினர்களும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சார்பில் 13 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் 9 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 3 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் 2 உறுப்பினர்களும் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் ஒரு உறுப்பினரும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முதல்வர் இமானுவேல் ஆனோல்ட்டினால் , 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் கடந்த 13ஆம் திகதி முன் மொழியப்பட்டபோது, அது தோற்கடிக்கப்பட்டது. அதன் பின்னர் அவர் மீண்டும் இரண்டாவது தடவையாக இன்று சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டமும் தோற்கடிக்கப்பட்டமையினால் அவர் பதவி இழந்துள்ளதுடன் மாநகர சபையின் செயற்பாடுகள் இன்றைய தினத்துடன் நிறைவுக்கு வந்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment