55 அலுவலகங்களை மூட அமைச்சரவை அங்கிகாரம், வரிக் கொள்கை வெகுவிரைவில் மறுசீரமைக்கப்படும் - அமைச்சர் பந்துல - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 8, 2023

55 அலுவலகங்களை மூட அமைச்சரவை அங்கிகாரம், வரிக் கொள்கை வெகுவிரைவில் மறுசீரமைக்கப்படும் - அமைச்சர் பந்துல

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

நட்டமடையும் அரச நிறுவனங்களின் சுமையை நாட்டு மக்கள் சுமக்க வேண்டியுள்ளதால் நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதைத் தவிர மாற்று வழிகள் ஏதும் தற்போது கிடையாது. வரிக் கொள்கை வெகுவிரைவில் மறுசீரமைக்கப்படும் என போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (8) இடம்பெற்ற ஜனாதிபதியின் அக்கிராசன உரையை தொடர்ந்து ஊடகஙகளுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, அரச நிறுவனங்கள் அனைத்தையும் மறுசீரமைக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு கிடையாது. இருப்பினும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஒரு சில கடுமையான தீர்மானங்களை செயற்படுத்த வேண்டியுள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள 55 அபிவிருத்தித் திட்ட அலுவலகங்களை மூடுவதற்கும், 33 அபிவிருத்தி அலுவலகங்களின் செயற்பாடுகளை இடைநிறுத்தவும் அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்காவிடின் அதன் சுமையை நாட்டு மக்கள் சுமக்க நேரிடும்.

பொருளாதார மீட்சியை இலக்காகக் கொண்டு புதிய வரிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வரி திருத்தங்கள் ஒரு தரப்பினருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். வரிக் கொள்கை வெகுவிரைவில் மறுசீரமைக்கப்படும்.

போராட்டத்தில் ஈடுபடும் உரிமை அனைத்து தரப்பினருக்கும் உண்டு. போராட்டங்கள் பிற தரப்பினருக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் அமைய வேண்டும். தொழிற்துறையினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்படத் தீர்மானித்துள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment