நாட்டில் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நடைமுறையிலுள்ளது : அனுரகுமார பேஸ்புக்கில் ஜனாதிபதியாக உள்ளார் - அமைச்சர் பிரசன்ன - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 8, 2023

நாட்டில் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நடைமுறையிலுள்ளது : அனுரகுமார பேஸ்புக்கில் ஜனாதிபதியாக உள்ளார் - அமைச்சர் பிரசன்ன

முனீறா அபூபக்கர்

இந்த நாட்டில் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது எனவே, புதிதாக செயல்படுத்த எதுவும் இல்லை என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தாம் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்திருக்கின்றமையால் மேலும் அது பற்றிப் பேசிப்பேசி வார்த்தைகளை நிரப்பிக் கொள்ள வேண்டிய தேவை இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கம்பஹா மாவட்ட பொதுஜன பெரமுன வழிநடத்தல் குழுவுடன் நேற்று (7) கொழும்பில் கலந்துரையாடலில் இணைந்து கொண்ட போது அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைக் குறிப்பிட்டார்.

அமைச்சர் மேலும் கூறியதாவது, 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் பற்றி தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். மேலும் அது பற்றிப் பேசிப்பேசி வார்த்தைகளை நிரப்பிக் கொள்ள வேண்டிய தேவை இல்லை.

நாங்கள் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தி அது முடிந்து விட்டது. புதிதாக நடைமுறைப்படுத்த எதுவும் இல்லை. நான் மாகாண முதலமைச்சரானதும் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் இந்த நாட்டில் செயற்படுத்தப்பட்டதானாலாகும்.

மக்கள் விடுதலை முன்னணி நாட்டு மக்களை கொன்று நாட்டையே அழித்த கட்சி. நாங்கள் வன்முறையற்ற கட்சி. நாங்கள் மக்களை கொன்ற கட்சி இல்லை. கொரோனா வைரஸால் மக்களைக் காப்பாற்றுவதற்காக தடுப்பூசி வழங்குவதற்கும் முன் நின்றது எமது உறுப்பினர்களே.

கிராமத்தில் வீதிகளை அமைத்துக் கொடுத்து, மக்களுக்கு தொழில்களை ஏற்படுத்திக் கொடுத்த நமக்கு மக்களுக்கு மத்தியில் போக முடியாமல் இருப்பது ஏன்?

நாங்கள் நாட்டில் வீதிகளை அமைக்கும்போது 10 வீதம் கமிஷன் எடுக்கப்படும் என்ற கருத்தை உருவாக்கினார்கள். அதற்கு பயந்து வீதி அமைப்பதை நிறுத்தினர். அது நாட்டின் வளர்ச்சியை நிறுத்தியது.

நாங்கள் கட்டிய வீதிகளில் எங்கள் கட்அவுட் வைப்பதை நிறுத்தி விட்டோம், ஆனால் இப்போது மக்கள் விடுதலை முன்னணி நாங்கள் அமைத்த வீதிகளில் கட்அவுட்கள் வைத்துள்ளன. இது குறித்து மக்களிடம் பேச வேண்டும். அப்போதுதான் கிராம மக்களுக்கு உண்மை நிலவரம் புரியும்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை இலக்காகக் கொண்டு நாம் முதலில் கிராம சேவகர் பிரிவு மட்டத்தில் கூட்டங்களை நடத்த வேண்டும். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் பிரதேச மட்டத்தில் நடைபெறும் கூட்டங்களில் கலந்து கொள்கிறோம்.

இது விருப்பு முறைமையில் நடைபெறும் தேர்தல் அல்ல, எனவே வேட்பாளர் வெற்றி பெற வேண்டும். நாங்கள் தொகுதியில் உள்ள வேட்பாளரின் விருப்பங்கள் மற்றும் தேவைகளைப் பற்றி நாங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.

அனுரகுமார திஸாநாயக்க ஏற்கனவே ஜனாதிபதி உடையை அணிந்துள்ளார். பேஸ்புக்கில் ஜனாதிபதியாகவும் உள்ளார். ஜனாதிபதி என்று நினைத்துக் கொண்டு நடக்கிறார், பேசுகிறார். அவர் கனவு கண்டாலும் அவரால் மக்கள் இதயங்களில் ஜனாதிபதியாக வர முடியாது. அதனாலேயே அநுரகுமாரவை அந்தக் கனவை தொடரச் சொல்லுவோம்.

கீழ் மட்டத்திற்குப் போய் வேலை செய்து இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவோம். இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு முன்பு இருந்த நிலையை விட இப்போது இருக்கும் நிலைமை நன்றாக உள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் முடிவு என்னவாக இருந்தாலும் நாங்கள் கூட்டங்களை நடத்தி மக்களுக்கு மத்தியில் செல்ல வேண்டும்.

சில ஜே.வி.பி வேட்பாளர்களுக்கு அவர்களின் தொகுதியின் நான்கு எல்லைகள் தெரியாது. அவர்கள் அவர்களின் மாகாணங்களில் இருந்து வந்தவர்கள் என்றார்.

கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் இங்கு குறிப்பிட்டதற்கமைய அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் கம்பஹா மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் வேலை செய்கின்றது.

இராஜாங்க அமைச்சர்களான பிரசன்ன ரணவீர, சிசிர ஜயக்கொடி, கம்பஹா மாவட்ட பாராளுமன்ற பாராளுமன்ற உறுப்பினர்களான சஹன் பிரதீப், மிலான் ஜயதிலக்க, உபுல் மகேந்திர ராஜபக்ஷ, கோகிலா ஹர்ஷனி குணவர்தன உள்ளிட்ட குழுவினர் இதில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment