போதுமானளவு கையிருப்பில் உள்ளது, மக்கள் அச்சம் கொள்ளத் தேவை இல்லை - லிட்ரோ நிறுவனம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 27, 2022

போதுமானளவு கையிருப்பில் உள்ளது, மக்கள் அச்சம் கொள்ளத் தேவை இல்லை - லிட்ரோ நிறுவனம்

(எம்.வை.எம்.சியாம்)

எதிர்வரும் நாட்களில் நுகர்வுக்கு தேவையான சமையல் எரிவாயு போதுமானளவு கையிருப்பில் உள்ளதாகவும் அதன் காரணமாக பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவை இல்லை என்றும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், நுகர்வுக்கு தேவையான அளவு எரிவாயு கையிருப்பில் உள்ளது. கொரோனா தொற்று காரணமாக இரண்டு வருடங்களின் பின்னர் நத்தார் மற்றும் புதுவருட கொண்டாட்டங்கள் காரணமாக எரிவாயுக்கு அதிகளவிலான கேள்வி நிலவுகிறது.

நாட்டிற்கு மாதாந்தம் 24,000 மெட்றிக் தொன் எரிவாயு தேவைப்படுகின்ற போதிலும் இந்த மாதம் 35,000 மெட்றிக் தொன் எரிவாயு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஜனவரி மாதத்திற்கு தேவையான எரிவாயு அளவினை விட மேலதிகமாக 27,000 மெட்றிக் தொன் எரிவாயு கொள்வனவு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதற்கமைவாக நாட்டு மக்கள் அச்சமின்றி எரிவாயுவை கொள்வனவு செய்ய முடியும். இதனிடையே அடுத்த ஆண்டு முதலாவது எரிவாயு விலை திருத்தத்தின் போது விலை குறைவடையும் என்று உறுதியாக எதிர்பார்க்க முடியாது.

இதேவேளை, டிசம்பர் மாதத்தில் ஐரோப்பாவில் அதிகளவிலான எரிவாயு நுகரப்படுகின்றமை, ரஷ்யா - உக்ரேன் யுத்தம் மற்றும் பல்வேறு நாடுகளில் காணப்படும் குளிரான காலநிலை காரணமாக எரிவாயு விற்கான விலை அதிகரிக்கப்படும் சாத்தியம் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment