அரசியல் மற்றும் தேர்தல் நிதிகளை தனது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தியதாக ஜப்பான் அமைச்சர் கென்யா அகிபா (Kenya Akiba) மீது குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து, அவர் தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
ஜப்பானில் புகுஷிமா மற்றும் பிற பேரிடர் பாதித்த பகுதிகளின் மறுசீரமைப்பு துறையின் அமைச்சராக இருந்து வந்த கென்யா அகிபா, அரசியல் மற்றும் தேர்தல் நிதிகளை தனது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதையடுத்து அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க பிரதமர் புமியோ கிஷிடா முடிவு செய்தார். இதை அறிந்து கொண்ட கென்யா அகிபா நேற்று பிரதமரை சந்தித்து தனது இராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
கடந்த 2 மாதங்களில் புமியோ கிஷிடாவின் அமைச்சர் சபையில் இருந்து நீக்கப்பட்ட 4ஆவது அமைச்சர் இவராவார்.
No comments:
Post a Comment