ஓய்வு பெறுவோரின் சேவை தேவையாயின் ஒப்பந்த அடிப்படையில் இணைக்கவும் - News View

About Us

About Us

Breaking

Saturday, December 31, 2022

ஓய்வு பெறுவோரின் சேவை தேவையாயின் ஒப்பந்த அடிப்படையில் இணைக்கவும்

ஓய்வு பெறுவோரின் சேவை தேவையாயின் ஒப்பந்த அடிப்படையில் இணைக்குமாறு, ஜனாதிபதி செயலகம் புகையிரத திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளது.

60 வயதாகும் அரச ஊழியர்களுக்கு டிசம்பர் 31ஆம் திகதி ஓய்வு வழங்குகின்ற, 2023 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுக்கமைய, இன்றையதினம் (31) நாடு முழுவதும் உள்ள அரசாங்க நிறுவனங்களிலிருந்து சுமார் 30,000 பேர் ஓய்வு பெறுகின்றனர்.

அரச நிர்வாக சேவை, ஆசிரியர் மற்றும் அதிபர் சேவைகள், முப்படை உள்ளிட்ட பல்வேறு சேவைகளில் கடமையாற்றும் அரச ஊழியர்களே இவ்வாறு ஓய்வூ பெறவுள்ளனர்.

இந்தளவிலான பெருந்தொகையான அரச ஊழியர்கள், ஒரே நேரத்தில் ஓய்வூ பெறும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

அரச தொழில் வாய்ப்புக்களில் உயர் பதவிகளிலுள்ள பலரும் ஓய்வு பெறவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய இன்று (31) முதல் 60 வயதில் ஓய்வு பெறும் அத்தியாவசிய ஊழியர்களின் சேவைகள் மேலும் தேவைப்படுமாயின், அவர்களை ஒப்பந்த அடிப்படையில் இணைத்துக் கொள்ளுமாறு, பணிப்புரை விடுத்துள்ளதாக, புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment