டுபாயிற்கு செல்லும் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய மாணிக்கக்கல் - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 22, 2022

டுபாயிற்கு செல்லும் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய மாணிக்கக்கல்

இலங்கையில் கண்டுப்பிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய நீல மாணிக்க கல் இன்னும் விற்கப்படதாக நிலையில் உள்ளது.

எனவே அதனை சுவிட்சர்லாந்தில் இருந்து துபாய்க்கு கொண்டு செல்லவுள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபையின் தலைவர் விராஜ் டி சில்வா தெரிவித்துள்ளார்.

சர்வதேச இரத்தினம் மற்றும் நகை கண்காட்சி 2023 இன் முதல் பதிப்பை அறிவிக்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம் (21) இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஆண்டு இரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்ட 503.2 கிலோ கிராம் எடையுள்ள நட்சத்திர சபையர் கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்துள்ளது.

குறித்த மாணிக்கக்கல் 2022 பெப்ரவரி 24ஆம் திகதியன்று சுவிட்சர்லாந்தில் உள்ள குபெலின் மாணிக்கக்கல் ஆய்வகத்தால், உலகின் மிகப்பெரிய சபையர் மாணிக்கக்கல்லாக அங்கீகரிக்கப்பட்டது.

நாங்கள் மாணிக்கக்கல் வாடிக்கையாளரை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. அதனால் நீல மாணிக்கக்கல்லை துபாயிற்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளோம் என்றார்.

இரத்தினங்கள் மற்றும் ஆபரணத் தொழில்களுக்கான வர்த்தக மையமாக இலங்கையை மேம்படுத்துவதற்காக இரத்தினக்கல் மற்றும் நகைக் கண்காட்சியை நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment