இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் வணிந்து ஹசரங்க ICC ரி20 பந்துவீச்சாளர் தரவரிசையில் 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இதற்கு முன்னர் ரி20 தரவரிசையில் 5ஆவது இடத்தில் இருந்த அவர், தற்போது 697 புள்ளிகளைப் பெற்று, மூன்று இடங்கள் முன்னேறி 2ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
2022 ரி20 உலகக்கிண்ணத் தொடரில் தற்போது வரை அதிகூடிய விக்கெட்டுகளை (13) கைப்பற்றி முன்னணியில் உள்ளார் என்பது குறிப்பிடத்கத்கது.
அத்துடன், ரி20 சகலதுறை ஆட்டக்காரர்கள் தரவரிசையில் வணிந்து ஹசரங்க 8ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் ரி20 பந்துவீச்சாளர் தரவரிசையில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷிட் கான் 700 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் இருந்து வருகிறார்.
அதற்கமைய, முதலிடத்திற்கும் வணிந்து ஹசரங்க வகிக்கும் 2ஆம் இடத்திற்கு 3 புள்ளிகளே வித்தியாசமாக உள்ளமை குறிப்பிடத்கத்கது.
ரி20 பந்து வீச்சாளர் தரவரிசையில் தென்னாபிரிக்க வீரர் தப்ரைஸ் ஸம்ஷி, அவுஸ்திரேலிய வீரர் ஜோஸ் ஹஸல்வூட், ஆப்கான் வீரர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.
ஆசிய நாடுகளைச் சேர்ந்த எவரும் முதல் 10 இடங்களுக்குள் இல்லாத நிலையில், இலங்கை அணியின் மஹீஷ் தீக்ஷண 9ஆவது இடத்தை வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment